வாந்தி-வயிற்றுப்போக்கால் பாதிப்பு: ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

வாந்தி-வயிற்றுப்போக் கால் ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-03-18 22:45 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் மற்றும் சுற்றுப்பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வாந்தி-வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இதில் 113 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வரலெட்சுமி தலைமையில் வேதாரண்யம், கோடியக்கரை அகஸ்தியன்பள்ளி தோப்புத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள் மற்றும் விடுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதில் குளோரின் கலந்த குடிநீர் பயன்படுத்தப்படுகின்றதா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர்் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓட்டல்களில் உணவை கையாள்பவர்கள் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

பல்வேறு உணவு கடைகளில் பலகாரங்கள் திறந்து வைத்தே விற்பனை செய்யப் படுகிறது. பல கடைகளில் கழிவு நீர் சாலைகளில் கொட்டப்படுகிறது. மேலும் பல வீடுகளில் செப்டிக்டேங் தொட்டி சாலையிலே அமைக்கப்பட்டு அவற்றின் தண்ணீர் நிரம்பி வெளியேறுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே உணவு துறை அதிகாரிகள் பெயரளவிற்கு சோதனை நடத்தாமல் மக்கள் நலனையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து முறையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்