‘முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. கூட்டணி’ தஞ்சையில், ஜி.கே.வாசன் பேச்சு
தஞ்சையில் அ.தி.மு.க.- த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஜி.கே.வாசன், ‘முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. கூட்டணி’ என்று கூறினார்.;
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி ஆகியோரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் செய்தார்.
தஞ்சை கீழவாசலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, ரெயிலடி, பூக்காரத்தெரு முருகன் கோவில், கல்லுக்குளம் சாலை, நாஞ்சிக்கோடை சாலை, யாகப்பா நகர், அருளானந்த நகர், சங்கம் ஓட்டல் சாலை, டெம்பிள்டவர் ஓட்டல் சாலை, பெரிய கோவில் சாலை, மேலவீதி, வடக்கு வீதி, காமராஜர் மார்க்கெட் வழியாக கரந்தையில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பிரசாரத்தில், ஜி.கே.வாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தி.மு.க., மக்களை ஏமாற்ற பொய் பிரசாரம் செய்து வருகிறது.
தஞ்சைக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கியது அ.தி.மு.க. அரசு தான். தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு தான். தஞ்சையில் புதிய கோர்ட்டு வளாகம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சுற்றுச்சாலை என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
அ.தி.மு.க., த.மா.கா. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் இரவு, பகல் பாராமல் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போராடுவார்கள். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காண்பார்கள். காவிரியை மீட்டெடுத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
மத்தியில், மாநிலத்தில் ஒத்த கருத்துடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால்தான் தொகுதி வளர்ச்சி பெறும். சிறுபான்மை மக்களுக்காக என்றைக்கும் அ.தி.மு.க., த.மா.கா. குரல் கொடுக்கும்.
முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. கூட்டணி. அந்த கூட்டணியை வீழ்த்த வேண்டும். மதவாதம் என்று மக்களை ஏமாற்றுகிறது. த.மா.கா. இஸ்லாமிய மக்களின் நலனுக்காக, பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காங்கிரசும் மக்களை ஏமாற்றி வருகிறது.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு முறையாக தண்ணீர் கொடுக்கவில்லை. அங்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கர்நாடக அரசுக்கு சாமரம் வீசும் கட்சியாக செயல்படுகிறது. காவிரி தண்ணீர் முறையாக கிடைக்காததற்கு காங்கிரசும், அங்குள்ள ஜனதாதளமும்தான் காரணம்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். இது ஏன் என்று தெரியவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் முதல்-அமைச்சர் பினராயி விஜயன், ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்கிறார். ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஓரணியில் பேசுகிறார்கள். இது ஏற்புடையதல்ல. தி.மு.க. கூட்டணி, தமிழக மக்களை ஏமாளிகள் என நினைக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காந்திக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.கே.வாசனுடன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் ரெங்கராஜன், இளைஞரணி மாவட்ட தலைவர் திருச்செந்தில் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில், மக்கள் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றனர்” என்றார்.