தலைவாசல் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்

தலைவாசல் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.;

Update:2019-04-02 03:45 IST
தலைவாசல், 

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை, முயல்கரடு, நேருநகர், வடசென்னிமலை, மணிவிழுந்தான், தெற்கு மணிவிழுந்தான், வடக்கு ராமானுஜபுரம், சிவசங்கராபுரம், வசந்தபுரம், சம்பேரி சாமியார்கிணறு, மணிவிழுந்தான் பஸ்நிலையம், வடகுமரை, தென்குமரை, நாவலூர் தெற்குமேடு, வேப்பம்பூண்டிமேடு, இலுப்பநத்தம், ஐயர் தோட்டம் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளர் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி பேசியதாவது:- நான் வெற்றி பெற்றால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். அரசு மகளிர் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன். வடசென்னிமலை அரசு கல்லூரிக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும். வட சென்னிமலை கோவில் பக்தர்கள் நலன் கருதி தரமான குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

காட்டுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். முட்டல் பூமரத்துப்பட்டி மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். தலைவாசல் பஸ் நிலையத்திலிருந்து பெரம்பலூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பேன்.

சிறுவாச்சூர் ஊராட்சியில் பழுதான அரசு சித்த மருத்துவமனை கட்டிடத்திற்கு புதிய கட்டிட வசதி தர முயற்சி செய்வேன். தேவியாக்குறிச்சி கிராமத்திற்கு பஸ் வசதி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் பொன்.கவுதம சிகாமணிக்கு ஆதரவாக தாய் விசாலாட்சி பொன்முடி இலுப்பநத்தம் கிராமத்தில் பெண்களிடம் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து காட்டுக்கோட்டை ஊராட்சி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, தலைவாசல் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணி, கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, குணசேகரன், முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி, காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆறகளூர் போகர், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அரங்க சங்கரய்யா, தலைவாசல் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் உதயகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவாசல் ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சி.க.முத்து மற்றும் ம.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்