ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2019-04-03 03:00 IST
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கடந்த 1975-1978-ம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம் பயின்ற மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற பொருளியல் துறை பேராசிரியர் மனோகரன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.

கல்லூரி முன்னாள் முதல்வர் மா.பா.குருசாமி எழுதிய 3 புத்தகங்களை முன்னாள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஆழ்வார், பாஸ்கர பால்பாண்டியன், பாபு சிவராஜ் கிருபாநிதி, அலெக்சாண்டர் கனகராஜ், ராமச்சந்திரன், நடராஜன், கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொருளியல் துறை தலைவர் ரமேஷ், தமிழ் துறை தலைவர் கதிரேசன் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் திருவுருவ சிலைக்கும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான புகழேந்தி செல்வகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் நாராயணன், கணேசன், பாலசுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்