தேர்தல் பணிகளில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினரை ஈடுபடுத்தக்கூடாது - அர்ஜூன் சம்பத் பேட்டி
தேர்தல் பணிகளில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினரை ஈடுபடுத்தக்கூடாது என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.;
திருப்பூர்,
இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பணத்தால் தேர்தலில் எப்படியும் ஜெயித்து விடலாம் என்று தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தி.மு.க.பிரமுகர்களின் வீடுகளில் கட்டுகட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் எந்தெந்த தொகுதிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க.வினரிடம் இருப்பதில் கைப்பற்றப்பட்ட பணம் மிகவும் சிறிய அளவே.
வருமான வரித்துறை தனது கடமையை சரியாக செய்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக தேர்தல் ஆணையம் துரைமுருகன் மீதும் அவருடைய மகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.வினர் 2 ஜி ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து, செலவு செய்கின்றனர்.
தேர்தல் ஆணையத்திலும், தேர்தல் பணிகளிலும் தி.மு.க.வால் தூண்டிவிடப்படும் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் ஊடுருவி உள்ளனர். இந்த சங்கத்தினரே தி.மு.க.வினருக்கு உதவி செய்கின்றனர். ஜாக்டோ-ஜியோ சங்கத்தினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இந்த சங்கத்தை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகவும் பொய்யாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கொடுக்க முடியும். சட்டரீதியாக அதற்கு சாத்தியம் இல்லை. நீட் தேர்வை தமிழக மக்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது. நிச்சயம் அந்த கூட்டணி தேர்தலில் மண்ணை கவ்வும். திருப்பூர் முழுவதும் அ.தி.மு.க. கோட்டை. மோடியின் அலை இங்கும் வீசிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.