தமிழக மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைக்க மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும்
தமிழக மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைத்திட மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
கன்னியாகுமரி,
நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா– அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முந்தினம் இரவு நாகர்கோவில், திங்கள்சந்தை போன்ற இடங்களில் பிரசாரம் செய்தார். இரவு கன்னியாகுமரியில் ஓட்டலில் தங்கினார். நேற்று காலை கன்னியாகுமரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடு முழுவதும் அதிக எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கான அறிகுறியாகும். ஜெயலலிதா இல்லாமல் நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம். எனவே, தேர்தலில் வெற்றி பெற இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்.
ஜெயலலிதா இருந்த போது, ‘நான் இல்லாவிட்டாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்கும்’ என்று கூறியிருந்தார். அதன்படி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசு நிலைக்கும். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட வேண்டும். அதன்மூலம் குமரி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
மோடி தலைமையிலான பா.ஜனதாவால் மட்டுமே மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும். இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. மக்கள் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மீனவர் சமுதாயத்திற்கு இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மீனவ மக்கள் நமது வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜாதி, மத. மொழி இன பாகுபாடு இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமக்கு மக்கள் என்ற ஒரே ஜாதிதான் உண்டு.
தமிழக மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்க மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும். அதற்கு, தேனீ போல சுறு சுறுப்பாக செயல்பட்டு பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–
குமரி மாவட்ட மக்களின் நலனுக்காக இதுவரை பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். எனவே, மீனவ மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். அனைவரும் இணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன், ஜாண் தங்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.