புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 30 வழக்குகள் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.;

Update:2019-04-05 03:45 IST
புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி களுக்கும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவர்கள் வாகன சோத னையில் ஈடுபடுவது, பொது மக்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குகிறார் களா என 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பான புகார்கள் குறித்து போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின் றனர்.

30 வழக்குகள்

இந் நிலை யில் புதுக் கோட்டை மாவட் டத்தில் தேர் தல் நடத்தை விதி முறை களை மீறு பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். புதுக் கோட்டை மாவட் டத்தில் இதுவரை உரிய ஆவனங்கள் இன்றி பணம் எடுத்து சென்றதாக 7 வழக்குகள், உரிய அனு மதியின்றி சுவர் விளம்பரம் எழுதுதல், சுவரோட்டி ஒட்டுதல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் 23 என மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மீது தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்