கொசுத்தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
கொசுத்தொல்லையை ஒழிப்பேன் என்று தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் கூறினார்.;
புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் வினோபா நகர், களத்துமேடு, அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவரிடம் தொகுதி மக்கள் குடிநீர் சுத்தமில்லாமல் வருவதாகவும், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், கொசுத்தொல்லை தங்கள் பகுதியில் அதிகமாக இருப்பதாகவும் மற்றும் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அவர்களிடம் வேட்பாளர் வெங்கடேசன், தன்னை வெற்றிபெற செய்தால் கொசுத் தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் பல்வேறு குறைகளை களைய நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சேதுசெல்வம், முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் தேவதாஸ், சிவா, வின்சென்ட் ஆகியோர் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.