திரைத்துறைக்கு சென்றிருந்தால் பிரதமர் மோடி நல்ல நடிகர் ஆகியிருப்பார் கரூர் பிரசாரத்தில் முத்தரசன் பேச்சு
திரைத்துறைக்கு சென்றிருந்தால் பிரதமர் மோடி நல்ல நடிகர் ஆகியிருப்பார் என கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.;
கரூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, கரூர் வெங்கமேட்டில் திறந்த வாகனத்தில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது நான் ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கியவன், எனவே சாமானியர்களின் வலிகளை அறிந்து ஆட்சி நடத்துவேன் என்று சொன்னார். அப்போது அவர் அறிவித்த தேர்தல் அறிக்கையின் படி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, உள்ளிட்ட வாக்குறுதியினை அளித்தார். அதில் ஏதாவது நிறைவேற்றினரா? என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில் தற்போதும் கூட ராமர் கோவிலை கட்டுவேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது திரைத்துறைக்கு மோடி சென்றிருந்தால் ஒரு நல்ல நடிகர் ஆகியிருப்பார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
மேலும் வாழை மரத்துக்கு முட்டு கொடுத்து வைப்பதுபோல் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செல்வதற்கு மோடி முட்டு கொடுத்து நிற்கிறார். இதன் காரணமாக தான் நீட் தேர்வில் விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய போதும் கூட, அதனை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதன் விளைவு தமிழக ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவபடிப்பு எட்டா கனியாகிவிட்டது. இதே போல் காவிரி மேலாண்மை ஆணையத்தினை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைத்த போதும் கூட, அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்டாரா? மாறாக தற்காலிமாக பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்பட்டனர். எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனில், நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
8 வழி சாலை திட்டத்தை கோர்ட்டு ரத்து செய்து உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.