மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.;

Update:2019-04-09 04:45 IST
விக்கிரவாண்டி,

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணி நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பணியில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியை விழுப்புரம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மொகிந்தர்பால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இந்த பணியை சிறு தவறுமின்றி விரைந்து முடிக்கும்படியும், அனைத்து வாக்குச்சாவடிகளையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சுந்தர்ராஜன், தொடர்பு அலுவலர் சையத் மெகமூத், தலைமையிடத்து துணை தாசில்தார் குபேந்திரன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன், தேர்தல் துணை தாசில்தார்கள் சிவா, அரிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்