6 நாட்கள் டப்பாவாலாக்கள் சேவை ரத்து
மும்பையில் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு டப்பாவாலாக்கள் மதிய உணவை அவர்களது வீட்டில் இருந்து கொண்டு சென்று வினியோகம் செய்து வருகின்றனர்.;
மும்பை,
டப்பாவாலாக்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 6 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளனர்.
இந்த நாட்களில் அவர்கள் குடும்ப சுற்றுலா செல்ல இருப்பதால் 6 நாட்களுக்கு தங்களது சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சங்க தலைவர் சுபாஷ் தாலேக்கர் தெரிவித்து உள்ளார்.