புதுச்சேரியை ஆளும் ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை - ரங்கசாமி தாக்கு
புதுச்சேரி மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.;
திருக்கனூர்,
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி மண்ணாடிப்பட்டு தொகுதியில் காட்டேரிக்குப்பம் மற்றும் பல்வேறு கிராமங்களில் திறந்தவேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் கருப்பு சட்டை போட்டு ஆட்சியாளர்கள் ஒரு நாடகம் நடத்தினர். இந்த ஆட்சியாளருக்கு மக்களை பற்றிய கவலை இல்லை. மக்கள் மீது அக்கறையும் இல்லை. தினமும் கவர்னரையும், மத்திய அரசையும், எதிர்க்கட்சியையும் குறை சொல்லி ஏதாவது பேட்டி கொடுப்பதுதான் வேலை.
ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறை சொல்லவேண்டும். ஆனால், இங்கு ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை பார்த்து இவர்கள்தான் மத்திய அரசிடமும், கவர்னரிடமும் சொல்லி திட்டங்களை தடுக்கின்றனர் என குறை சொல்கிறார்கள். நீங்கள் நன்றாக செயல்படாததை, எடுத்துச்சொல்வதுதான் எங்கள் வேலை.
ரங்கசாமி மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பேசுகிறார். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் அமைச்சராக இருந்துள்ளேன். எத்தனை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்துள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இங்குள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடாமல் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் தொடர்ந்து நடத்தி கொண்டு வந்தேன். ஆனால், இந்த ஆலையை காங்கிரசார் சாதாரணமாக மூடிவிட்டனர். இதனை திறக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ரேஷன் கடையை மூடி வைத்துள்ள அரசு இதுதான். ஆனால், என்னை மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் வேட்பாளர் கூறுகிறார். இவர்கள் அனைத்தையும் மூடி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்த ஆட்சி மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே ஜக்கு சின்னத்தில் வாக்களித்து என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.