செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.;

Update:2019-04-16 04:15 IST
மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டம் மேலபூவாணி கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் மாடசாமி(வயது 27) என்பவர் செல்போன் கோபுரத்தின் மேல் பணிபுரிந்துகொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்