நாமக்கல்லில் திருமண கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்
நாமக்கல், பள்ளிபாளையத்தில் திருமண கோலத்தில் வந்து புதுமண தம்பதிகள் வாக்களித்தனர்.;
நாமக்கல்,
நாமக்கல் கணேஷபுரத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன், இவரது மனைவி கோமதி. இவர்களின் மகள் சவுந்தர்யா. இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் நேற்று காலையில் நாமக்கல்லில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஜனநாயக கடமையாற்றுவதற்காக புதுமணப்பெண் சவுந்தர்யா, தனது கணவர் மாரிமுத்துடன் திருமண கோலத்தில் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் இங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
இதேபோல குமாரபாளையத்தை சேர்ந்தவர் சரவண பாலாஜி (26). இவருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த கவிதா (22) என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுப்பெண் பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், சரவண பாலாஜி குமாரபாளையத்திலும் தங்களது ஓட்டுக்களை போட்டனர்.