ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஊதியம் என்ற முறையை அரசு கைவிட வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஊதியம் என்ற முறையை அரசு கைவிட வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ் கூறினார்.;
திருவாரூர்,
திருவாரூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மே தின விழா, பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த மே தினத்திலேயே, திட்டமிட்டு அரசு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அழிக்க வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை அரசு கைவிட வேண்டும். 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறிப்பாக ஆசிரியர் தகுதி என்கின்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதியம் என்ற நிலைப்பாடு, இந்த மாதத்திலேயே ஊதியம் கிடையாது என்று ஒரு முடிவை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. இதை அரசு கைவிட வேண்டும்.
தனித்துறை அமைச்சர் நியமனம்
தொடக்கக்கல்வித்துறையை தனித்துறை ஆக்க வேண்டும். அதற்கு தனித்துறை அமைச்சர் நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம். பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இதுவரை அறிவிக்கவில்லை. எனவே மாறுதலுக்கான கலந்தாய்வு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மதிவாணன், ஓய்வு பிரிவு செயலாளர் பூபாலன், மாநில மதிப்பியல் தலைவர் மாயவன், மாநில பொருளாளர் சரவணன், மாநில மகளிரணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, மாநில தலைவர் நடராஜன், அரசு துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் சந்திர சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார செயலாளர் முருகேசன் வரவேற்றார். முடிவில் வட்டார பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.