அமெரிக்க நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க நிறுவனத்தை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவாரூர்,
அமெரிக்காவை சேர்ந்த ஒரு கார்்ப்பரேட் நிறுவனம் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலைகளை இந்தியாவில் நடத்தி வருகிறது. இந்த சிப்ஸ் தயாரிப்பதற்காக மரபணு மாற்றம் செய்து புதிய உருளை கிழங்கு விதைகளை உருவாக்கி, அதை பயிர்் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டத்தின்படி பதிவு செய்துள்ளது. இந்த விதைகளை பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் விவசாயிகளிடம் கொடுத்து பயிரிட வைத்து, அங்கு உற்பத்தியாகும் கிழங்குகளை தன் ஆலைக்கு கொள்முதல் செய்து வந்துள்ளது.
இந்த கிழங்குகளுக்கு அமெரிக்க நிறுவனம் உரிய விலையை விவசாயிகளுக்கு கொடுக்காத சூழலில் உற்பத்தி செய்த உருளை கிழங்குகளை சிப்ஸ் தயாரிக்கும் பிற கம்பெனிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர்். இதனால் விவசாயிகள் மீது அமெரிக்க நிறுவனம் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டுள்ளது. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், பாண்டியன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் மீது வழக்கு தொடுத்த அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி்னர்.