தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ரூ.181 கோடியில் புதிய திட்டம்
தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ரூ.181 கோடியில் புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 2 இடங்களில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1983-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது 51 வார்டுகள் உள்ளன.
தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, தஞ்சையுடன் அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. தஞ்சை மாநகராட்சி 30 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக திருமானூரில் ராட்சத கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் உள்ள வெண்ணாறு நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து குளோரின் கலக்கப்பட்டு தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினை நிலவியது. இதையடுத்து ஒவ்வொரு வார்டுகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி தஞ்சை மாநகரில் 390 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் மோட்டார் பொருத்தப்பட்டு, ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீர் குழாயுடன் இது இணைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு 12 வகையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சையில் உள்ள குளங்கள் பராமரிப்பு, சிவகங்கை பூங்கா மேம்படுத்துதல், குப்பைக்கிடங்கை இடம் மாற்றுதல் உள்ளிட்ட 12 வகையான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் குடிநீர் அபிவிருத்தி, சாலை மேம்பாடு தெருவிளக்கு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மேலும் புதிதாக 2 ராட்சத கிணறுகள் அமைக்கப்படுகின்றன. அங்கிருந்து குடிநீர் அருகில் உள்ள ஒத்தக்குடி என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு புதிதாக நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரும் நீர் சுத்திகரிக்கப்பட்டு தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் உள்ள வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இதற்காக அங்கு ஏற்கனவே இருக்கும் நீரேற்று நிலையத்துக்கு அருகே புதிதாக ஒரு நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து குடிநீரில் குளோரின் கலந்து தஞ்சை மாநகராட்சி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்காக தஞ்சை மாநகரில் 7 இடங்களில் அம்ருத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.181 கோடியே 60 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. திருமானூர் கொள்ளிடம் ஆறு, ஒத்தக்குடி, வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையம் ஆகிய இடங்களிலும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 18 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது”என்றார்.