குப்பை கிடங்கு எரிவதால் மக்கள் பாதிப்பு: பல்லாவரம் நகராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
வேங்கடமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதால் இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று கேட்டு பல்லாவரம் நகராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.;
வண்டலூர்,
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. குப்பையில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலையும் அங்கு செயல்படுகிறது.
இந்த ஆலை மற்றும் குப்பைகிடங்கில் கடந்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் புகைமூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து புகை கிளம்பியதால், அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. சிலர் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.
பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் பல நாட்களாக போராடி புகையை கட்டுப்படுத்தி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே புகைந்து கொண்டே இருக்கிறது.
இதனால் வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், அகரம்தென், கண்டிகை, மேலக்கோட்டையூர், பதுவஞ்சேரி, வெங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் திடக்கழிவு கிடங்கில் இருந்து புகை கிளம்புவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக முழு விவரங்களுடன் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்லாவரம் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது, முதல் தீயை கட்டுப்படுத்தினோம். ஆனால் தொடர்ந்து புகை வந்துகொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த கிடங்கில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படும், அருகில் உள்ள ஏரியில் இருந்தும் தண்ணீர் எடுத்து கட்டுப்படுத்தி வருகிறோம்.
வெயில் காலம் என்பதால் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.