வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரம்பெறாத பளளிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை கலெக்டர் ராமன் எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 44 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு கலெக்டர் ராமன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அங்கீகாரம் பெறாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.;

Update:2019-05-04 04:15 IST

வேலூர்,

இது குறித்து கலெக்டர் ராமன் தெரிவித்திருப்பதாவது:–

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு இணங்கவும், ஐகோர்ட்டு தீர்ப்பின்படியும் அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்படவேண்டும். எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அங்கீகாரமின்றி செயல்பட்டுவந்த பள்ளிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்த பள்ளிகளில் வழங்கப்படும் கல்விச்சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகள் எழுத இயலாதநிலையும் ஏற்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பின்வரும் 44 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கீகாரம்பெறாத இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அங்கீகாரம்பெறாத பள்ளிகள் விவரம் வருமாறு:–

அரக்கோணம் ஜெய்ஸ்ரீ சீனியர் செகண்டரி பள்ளி, நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, டயானா மெட்ரிக் பள்ளி, ரெயின்போ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, திருமலா இண்டர்நே‌ஷனல் பள்ளி, நெமிலி ஒன்றியம் சாய்ராம் நகர் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி, அரக்கோணம் அரிகிலப்பாடி ஸ்ரீ வெற்றிவேல் வித்யாலயா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, காவேரிப்பாக்கம் கோல்டன்குரோத் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, சாலை கிராமத்தில் உள்ள பாரதி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, கூடலூர் சக்ரி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, ஆற்காடு ஒன்றியம் கீழ்குப்பம் கலைமகள் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, கத்தியவாடி பிரில்ஸ் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளி, வேலம் மதர் இந்தியா மழலையர் பள்ளி, லோகாபுரம் லோட்டஸ் மழலையர் பள்ளி, ரெண்டாடி தர்‌ஷன் மழலையர் பள்ளி, ஜெ.குரு மழலையர் பள்ளி, மேல்பாடி மகாலட்சுமி ஹயகிரிவர் மழலையர் பள்ளி, சோளிங்கர் வாணிவித்யாலயா மழலையர் பள்ளி, புளுமிங் மழலையர் பள்ளி, வாலாஜா அகஸ்தீஸ்வரர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், வன்னிவேடு பசும்பொன் நகர் வர்ணவீனா மழலையர் பள்ளி, மணியம்பட்டு கிரைஸ்டு தி கிங் மழலையர் பள்ளி, வன்னிவேடு வெற்றி வித்யாலயா மழலையர் பள்ளி.

வாலாஜா ஒன்றியம் எடக்குப்பம் கிரிஷ் மழலையர் பள்ளி, தகரகுப்பம் செயின்ட் பில்ஸ் ஜீனியஸ் மழலையர் பள்ளி, வள்ளலார் நகர் ஸ்ரீ வெற்றிவேலன் இன்டர்நேஷ்னல் பள்ளி, பாடியம்பாக்கம் விஸ்டம் மெட்ரிக் பள்ளி, தென்றல் நகர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, பாகாயம் எம்.ஜி.ஆர்.நகர் இன்பா மழலையர் பள்ளி, விரிஞ்சிபுரம் வில்லா மழலையர் பள்ளி, செதுவாலை செயின்ட் மேரீஸ் மழலையர் பள்ளி, பள்ளிகொண்டா எஸ்.பி.எம்.நகர் செயின்ட் ஜோகன்ஸ் மழலையர் பள்ளி, சின்ன அல்லாபுரம் சூர்யா மழலையர் பள்ளி, காட்பாடி ஹோலி டிரினிடி மழலையர் பள்ளி, ஆம்பூர் கிருஷ்ணய்யர் தெரு அல்–அமீன் மழலையர் பள்ளி, குடியாத்தம் பொன்னம்பட்டி எவர் கிரீன் மழலையர் பள்ளி, காத்தாடிகுப்பம் ஹயகிரீவா மழலையர் பள்ளி.

குடியாத்தம் மீனூர் ஏ.எல்.டி.மழலையர் பள்ளி, பேர்ணாம்பட்டு அல்ப்லா மழலையர் பள்ளி, ஏ.எஸ்.எச்.எப்.எச்.ஏ.எம்.எஸ். மழலையர் பள்ளி, துத்திப்பட்டு எனாக் லிம்ரா மழலையர் பள்ளி, பேர்ணாம்பட்டு நோபல் நர்சரி பள்ளி, கிரீன்வேலி சி.பி.எஸ்.இ. பள்ளி, ஆலங்காயம் வேல் மெட்ரிக் பள்ளி, செக்குமேடு அப்துல் கலாம் மெட்ரிக் பள்ளி.

மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அங்கீகாரமின்றி செயல்படும் பட்சத்தில் அந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்