சென்னை மெட்ரோ ரெயிலில் 31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயணம்

சென்டிரல் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மாதந்தோறும் கல்வி பயணம் செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.;

Update:2019-05-04 03:30 IST
சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் பற்றியும், அதில் உள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்டிரல் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை மாதந்தோறும் கல்வி பயணம் செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் 60 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 31 ஆயிரத்து 178 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரெயில் பயணித்துள்ளனர். மேலும் இந்த கல்வி ஆண்டிலும் கல்விப் பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்