கோவை குடோன்களில் 3¼ டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் உள்ள குடோன்களில் தயாரிக்கப்பட்ட மற்றும் கடைகளில் பதுக்கி வைத்திருந்த 3¼ டன் பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
கோவை,
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆண்டு தொடக்கத்தில் இந்த உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டாலும், அதன்பின்னர் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் கோவையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் தாராளமாக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் கோவை மாநகராட்சி மீண்டும் இறங்கியுள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் மாநகராட்சி நகர் நல அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அனைத்து கடைகளிலும் தீவிர சோதனை நடத்தி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் 156 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 3¼ டன் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த கடைகள் மற்றும் குடோன்களுக்கு ரூ.39 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் தவறு. எனவே கடைகளில் திடீரென்று சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகிறோம். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும். கோவை கணபதி, விளாங்குறிச்சி, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை, பீளமேடு, சிங்காநல்லூர், ராம்நகர், வெள்ளலூர், நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ‘நான் ஓவன்’ என்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சிறிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு விற்பனைக்காக வைத்திருந்த அந்த பைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.