சேரன்மாதேவியில் பலத்த மழை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சேரன்மாதேவியில் நேற்று பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2019-05-12 03:30 IST
சேரன்மாதேவி, 

சேரன்மாதேவியில் நேற்று பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மரம் முறிந்து விழுந்தது

மழை பெய்து கொண்டிருந்த போது சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சார வயர்களும் அறுந்து விழுந்தன. அவற்றை அதிகாரிகள் சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்