குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி: புதுத்தெரு கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு
புதுத்தெரு கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே ராயமுண்டான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு கிராமத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு புங்கனூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் அமைக்கப்பட்டது. தற்போது அந்த குழாய் வழியாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நின்று விட்டது.
இந்த கிராமத்தில் உள்ள 2 கிணறுகளும் வறண்டு விட்டன. ஊராட்சி சார்பாக வழங்கப்படும் குடிநீர் உப்பு தன்மையுடன் இருப்பதால் குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்த முடியாமலும் உள்ளது. இதனால் இந்த பகுதியிலும் இதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக நாள்தோறும் 4 கி.மீ. தொலைவில் உள்ள சோழகம்பட்டிக்கு செல்ல வேண்டி இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று புதுத்தெரு கிராமத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்தில் பல்வேறு இடங்களில் பொக்லின் எந்திரங்களை கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், புதுத்தெரு கிராமத்தில் உள்ள மேட்டுப்பகுதிக்கும், அதையொட்டி உள்ள சொரக்குடிப்பட்டிக்கும் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைந்து தீர்வு
இந்த பணிகளை பூதலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசன் பார்வையிட்டார். ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம், பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.