அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடா? “துணைவேந்தரின் குற்றச்சாட்டு தவறானது” - எடப்பாடி பழனிசாமி பேட்டி
“அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சுரப்பா கூறிய குற்றச்சாட்டு தவறானது” என்று மதுரையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
மதுரை,
மதுரை, சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துகொண்டார். பின்னர் அவர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததை வரவேற்கிறேன். நடிகர் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து பேச வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் அது குறித்து கருத்துகூற இயலாது.
தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் ஆங்காங்கே குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் கலெக்டர்கள் தலையிட்டு, குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணைவேந்தர் சுரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசும் அரசியல் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவு வரும் முன்பே ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத், எம்.பி. ஆகிவிட்டதாக கல்வெட்டு வைக்கப்பட்டது குறித்து கேட்ட போது, “அதுகுறித்து தன்னுடைய கவனத்திற்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.