பல்லடம் அருகே வாலிபர் சாவு: நண்பர்கள் கொலை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார்
பல்லடம் அருகே வாலிபரை, அவருடைய நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார் மனு கொடுத்து முறையிட்டார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் இந்திரா நகர் தெற்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மனைவி கமலா(வயது 48). இவர்களுடைய மகன் சிவக்குமார்(31). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி காலை தெற்குபாளையம் பிரிவில் இறந்து கிடந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சிவக்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியிடம் கமலா மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறேன். ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவள். எனது மகன் சிவக்குமார் கடந்த மாதம் 19-ந் தேதி காலை தெற்குபாளையம் பிரிவில் காயத்துடன் கிடந்தான். அவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் மதுபோதையில் விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று கூறி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடலை எங்களிடம் ஒப்படைத்தனர். மகனின் இறப்பால் விரக்தியில் இருந்த எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
கடந்த மாதம் 18-ந் தேதி இரவு வீட்டில் இருந்த எனது மகன் சிவக்குமாரை, சிவா என்கிற நபர் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்து அழைத்துச்சென்றார். மேலும் 3 பேர் சேர்ந்து சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். எனது மகன் திருப்பூரை சுற்றியுள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தான். முகநூல் மூலம் அறிமுகமாகிய சிவாவுக்கும், அவருடன் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட எனது மகனை பேசி ஏமாற்றி அழைத்துச்சென்று தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்கள்.
எனவே எனது மகனின் செல்போனில் உள்ள பதிவு, அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். மறுபுலன்விசாரணை செய்து என் மகனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். என் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதால் காவல்துறையும், அரசும் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவிட்டார்.