நாகையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2019-10-03 04:30 IST
நாகப்பட்டினம்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேதம்புத்தூர் கிராம உதவியாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நாகை வட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால்ராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளவரசன், செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கோ‌‌ஷங்கள்

கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் ராதாகிரு‌‌ஷ்ணனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் நாவலன், சரக தலைவர் கனக சுப்பிரமணியன் உள்பட கிராம உதவியாளர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்