மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவிலில் வாகன சோதனையின் போது மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் உள்பட 3 பேர் ைகது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-10-17 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா மற்றும் போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை போலீசாா் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

சோதனையில், அந்த லாரியில் மணல் இருந்தது தெரிய வந்தது. மணல் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் குறித்து லாரி டிரைவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் உள்பட 3 பேரும் சேர்ந்து தங்கராஜாவை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்றனர்.

3 போ் கைது

அதற்குள் சக போலீசார் வந்து 3 பேரையும் மடக்கி பிடித்து வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், லாரி டிரைவர் குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 45), வெட்டூர்ணிமடம் ஸ்டாலின் ஜோஸ் (31) மற்றும் திக்குறிச்சியை சேர்ந்த தாவீத்ராஜா(24) என்பதும், இவர்கள் திருச்சியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமார் உள்பட 3 பேரையும் வடசேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்