மாவட்ட செய்திகள்
மேட்டூரில் வீட்டில் பதுக்கிய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்

மேட்டூரில் வீட்டில் பதுக்கிய 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரே‌‌ஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக மேட்டூர் உதவி கலெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் தாசில்தார் பானு மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்த ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளையும், அதை எடுத்து செல்ல பயன்படுத்திய மினி லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்