காரில் கடத்திய 70 மது பாட்டில்கள் பறிமுதல்; முன்னாள் ராணுவ வீரர் கைது

களியக்காவிளை அருகே காரில் கடத்திய 70 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்த விவரம் வருமாறு:–

Update: 2020-02-13 22:00 GMT
குழித்துறை, 

மார்த்தாண்டத்தில் உள்ள தக்கலை மது விலக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் தலைமையில் போலீசார் நடைக்காவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காருக்குள் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் 70 மது பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் நடைக்காவு பகுதியை சேர்ந்த சுனில்ராஜ் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மதுவை வாங்கி விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் காருடன் 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதை கடத்திய ராணுவ வீரர் சுனில்ராஜையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்