ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் கடத்தல்

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு முககவசங்கள் என்ற பெயரில் பார்சலில் கடத்தி வந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-08-01 00:06 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மருத்துவ உபகரணங்கள் கொண்டுவர சரக்கு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களில் மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

5ஜி செல்போன்கள்

இந்த நிலையில் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் விலை உயர்ந்த முக கவசங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் இந்தியாவில் இதுவரை அனுமதிக்கப்படாத 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.70 லட்சம் மதிப்புள்ள பிரபல நிறுவனத்தின் 5ஜி செல்போன்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி வந்தவர்கள் யார்?. இந்தியாவில் இதுவரை வராத 5 ஜிக்கு இப்போதே புதிய செல்போன்கள் ஏன் கொண்டு வந்தார்கள்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்