தென்காசி, சங்கரன்கோவிலில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, சங்கரன்கோவிலில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-13 19:25 GMT
தென்காசி:
தென்காசி, சங்கரன்கோவிலில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்ப்பாட்டம்

தென்காசி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட இணை செயலாளர் சேகர், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் மாரியப்பன், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சலீம், முகம்மது மீரான் ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோயில்பிச்சை, கிளை பொறுப்பாளர் சண்முகவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்

இதேபோல் சங்கரன்கோவில்  யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராசையா தலைமை தாங்கினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலர் பாலுச்சாமி, குருவிகுளம் ஒன்றிய தலைவர் புஷ்பவனம், இணைச் செயலர்கள் தங்கப்பாண்டியன், மாடசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வேல்ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். செயலர் காமராஜ் வரவேற்றார். வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்