சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி

சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.;

Update:2022-05-18 03:33 IST
நாகர்கோவில், 
சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
புகார் பெட்டி
குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப் படையில் பணியாற்றும் போலீசாருக்கு குறைகள் மற்றும் உயர் அதிகாரிகளால் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால் அதுதொடர்பாக புகார் அளிப்பதற்கு வசதியாக புகார் பெட்டி வைக்கும் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இந்த புகார் பெட்டியானது நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
புகார் பெட்டியில் போடப்படும் மனுக்களை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரடியாக பார்த்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.
இந்த புகார் பெட்டியின் மேலுள்ள சுவரில், "காவல் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையினரும் தங்களது கருத்துக்கள் மற்றும் குறைகளை மனுவாக எழுதி கீழே உள்ள புகார் பெட்டியில் போடவும். இந்தப் புகார் பெட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் திறந்து மனுக்கள் பரிசீலிக்கப்படும்" என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்