தேசிய செய்திகள்
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ராணுவத்தினரை அனுமதிப்பதே சிறந்தது -இந்திய ராணுவ தளபதி

சமூக வலைத்தளங்களில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கி வைப்பது சாத்தியம் இல்லாதது என தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

சமூக வலைத்தளங்களை ராணுவத்தினர் பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் இருந்து  விலகி நிற்கும்படி எங்கள் வீரர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ராணுவத்தினரையோ, அவர்களது குடும்பத்தினரையோ ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க முடியாது. ராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதையும், சமூக வலைத்தளங்களில் இருப்பதையும் அனுமதிப்பதே சிறந்தது. வீரர்கள் மத்தியில் ஒழுக்கத்தை சுமத்துவதற்கு வழிவகுப்பது  முக்கியம்.

நவீன உலகில் தகவல் தொடர்பு மற்றும் உளவியல் ரீதியிலான போர் முக்கியமானது. இதை சமாளிக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ராணுவத்தினரை அனுமதிப்பதே சிறந்தது என கூறி உள்ளார்.