தேசிய செய்திகள்
கைலாஷ் யாத்திரை: அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் யாத்திரையின் அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 26ம் தேதி கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்காக டெல்லியில் இருந்து கர்நாடகா சென்றார். அங்குள்ள ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயங்கர சத்தத்துடன் அவர் சென்ற விமான இடது பக்கம் சாய்ந்தபடி சென்றது. விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியதை அடுத்து ராகுல் நிம்மதி அடைந்தார்.

 இந்த சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அவர் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லப் போவதாக அறிவித்தார்.  எனவே அவர் விமான விபத்தில் இருந்து உயிர்தப்பியதற்கு பரிகாரமாக சென்றிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியானது. 15 நாட்கள் வரை இந்த யாத்திரை நீடிக்கும் என தெரிகிறது.  கைலாஷ் யாத்திரை கடந்த ஆக. 31-ம் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டு சென்றார். 

கைலாஷ் யாத்திரை குறித்து ராகுல்காந்தி அவ்வபோது டுவிட்டரில்  பகிர்ந்து வருகிறார். 

இந்தநிலையில்,  அவர் அழைத்தால் ஒருவன் கைலாஷ் யாத்திரை செல்கிறான்.  இந்த வாய்ப்பை பெற்றதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அழகான பயணத்தில் நான் காணும் இயற்கை காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மானசரோவர் ஏரி மிகவும் மென்மையாக அழகாக அமைதியாக காணப்படுகிறது. இங்கு வெறுப்பதற்கு யாரும் இல்லை. இந்த நீர்நிலையை இந்தியாவில் இதைத்தான் நாம் வணங்குகிறோம் எனக்குறிப்பிட்டார்.
The waters of lake Mansarovar are so gentle, tranquil and calm. They give everything and lose nothing. Anyone can drink from them. There is no hatred here. This is why we worship these waters in India.#KailashYatrapic.twitter.com/x6sDEY5mjX— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2018A man goes to Kailash when it calls him. I am so happy to have this opportunity and to be able to share what I see on this beautiful journey with all of you.#KailashYatra— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2018