தேசிய செய்திகள்
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

கொல்கத்தாவின் பழமையான மெஜெர்காத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. #MajerhatBridge
கொல்கத்தா, 

கொல்கத்தாவின் 40 ஆண்டுகள் பழமையான மெஜெர்காத் பாலம் கடந்த 4-ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மாநில தீயணைப்பு படை, மீட்பு குழு மற்றும் போலீஸ் மீட்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாலம் இடிந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என விபத்துக்கான காரணம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.