டெல்லியில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Update: 2018-09-06 10:47 GMT
புதுடெல்லி,

இந்தியா மற்றும் அமெரிக்க  மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியத்  தரப்பில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் அமெரிக்க தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடர உள்ளது.  

இந்தநிலையில்,  டெல்லியில் நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  ராணுவ கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 

மேலும்  இரு நாட்டு இடையிலான பிரச்சினை, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யா உடனான இந்தியாவின் நட்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்