பயங்கரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அழிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும், இந்தியாவும் வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-09-06 12:42 GMT

டெல்லியில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,  பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அழிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 10 ஆண்டுகள் ஆகிறது, இன்றுவரையில் தாக்குதலை நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைது செய்தவர்கள் எல்லோரையும் விடுதலை செய்துவிட்டது. இந்தியாவும் பல்வேறு நிலைகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

இப்போது பாகிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தை அமெரிக்காவுடன் மீண்டும் இந்தியா எழுப்பியுள்ளது. இதனையடுத்து, இருதரப்பிலும் பாகிஸ்தானுக்கு இந்த வலியுறுத்தல் வைக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல், பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், உரி பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லைத் தாண்டிய பிற தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கையை எடுக்க வேண்டும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று இருநாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்