தேசிய செய்திகள்
மேற்கு வங்காளத்தில் மற்றுமொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து

கொல்கத்தாவில் மெஜெர்காத் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, சிலிகுரி அருகே ஆற்றுப்பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. #WestBengalBridge
சிலிகுரி,

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகே உள்ள பான்சிடேவா பகுதியில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. பிச்லா ஆற்றுப்பகுதியை கடந்து ராகல்கான்ஞ் மற்றும் மன்கான்ஞ் பகுதிகளை இணைக்கும் இப்பாலத்தினை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை பாலம் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது டிரக் ஒன்று சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதே போல், கொல்கத்தாவின் 40 ஆண்டுகள் பழமையான மெஜெர்காத் பாலம் கடந்த 4-ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேலும் இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.