எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளது.

Update: 2018-09-07 06:44 GMT
புதுடெல்லி

மும்பை போலீஸ் மற்றும் இந்தியன் உளவுத்துறை அமைப்பும்  இணைந்து    தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் பற்றிய தகவல்களை அமெரிக்காவிடம் சேகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதனை  மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கிறது.

இதைத் தவிர, தாவூத் பல்வேறு வணிக நிறுவனங்கள், அவரது உதவியாளர்கள் மற்றும் அவற்றின் முகவரிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றையும் சேகரிக்க உள்ளது.உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் பகிர்ந்து கொள்கிறது.

முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கனவே லண்டனில் தாவூத் பல சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிட தக்கது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆன பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையேயான பேச்சு வார்த்தைகள் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.  இந்த பேச்சு வார்த்தையில் H1B விசா, கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் போன்ற சிக்கலான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு தரப்பினரும் நீண்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை பொறுத்தவரை முக்கியமான மற்றும் மறைமுகமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், கிழக்கு கடற்கரையில் கூட்டு முக்கோணப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், அணுசக்தி ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 அல் கொய்தா, ஐஎஸ், லஷகர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹக்கான் நெட்வர்க், தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், டி-கம்பெனி மற்றும் அவர்களது துணை நிறுவனங்கள் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை பலப்படுத்துவதை மற்றும்  ஒத்துழைப்பு ஆகிய கூட்டு அறிக்கை வெளியிடபட்டு உள்ளது.

மேலும் செய்திகள்