விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: காட்சிக்கு வைக்கப்பட்ட விண்வெளி உடை

விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: விண்வெளி உடை மற்றும் விண்கலம்,கேப்சூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-07 07:22 GMT
பெங்களூரு: 

இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6-வது எடிஷன் விழாவில் அறிவித்தார்.

இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா வை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.

இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் பிரெஞ்சு ஸ்பேஸ் நிறுவனம் அனைத்து துறைகளிலும்  இருக்கும் கை தேர்ந்த  வல்லுநர்களை வைத்து பணிக்குழுவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேள் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ, அதன் விண்வெளி வீரர்கள் மூலம் நுண்ணோக்கி மீது சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி குழு காலநிலை கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு, புதிய கண்டுபிடிப்பு, புதிய விண்வெளி வாகன கண்டுபிடிப்பு போன்ற அனைத்துத் துறையிலும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடுமென்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு ஸ்பேஸ், இரு நாடுகளும் மார்ஸ், வீனஸ் மற்றும் நட்சத்திரங்களின் ஆராய்ச்சியில் இடுப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவில்  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) ஏஜென்சி உருவாக்கிய ஒரு ஸ்பேஸ்  உடை காட்சிக்கு வைக்கபட்டது. இந்த விண்வெளி ஆரஞ்சு நிற  உடை திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் மையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக   உருவாக்கப்பட்டது.

இந்த உடையில்  ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றை வைக்கபட்டு இருக்கும். விண்வெளி வீரர் 60 நிமிடங்கள் இடைவெளியில் சுவாசிக்க அனுமதிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக இஸ்ரோ இரண்டு உடைகளை  உருவாக்கியுள்ளது .விண்வெளி ஆராய்ச்சிக் குழுவும் குழு மாதிரியைக் காட்டியது மற்றும் விண்வெளியில் இருந்து  வருவதற்கு உரிய   கேப்சூல் மாதிரை  இஸ்ரோ ஏற்கனவே மாதிரியை சோதனை செய்துள்ளது.

குழு மாடல் கேப்சூலில் , மூன்று விண்வெளி வீரர்கள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை வாழ்வார்கள். பேக்சூல் ஒரு வெப்பக் கேடயம் இருக்கும், அவை வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது பூமிக்குச் செல்லும் ஒரு சுழற்சியைக் கொண்டு மாறும். கவசம் கேப்சூலில்  உள்ள வெப்பநிலை 25 டிகிரி என்று உறுதிசெய்யும், ஆனால் விண்வெளி வீரர்கள் சாளரத்தின் மூலம்  தீப்பிழம்புகளைக் காண முடியும். கேப்சூல் ஒவ்வொரு 1.5 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை சுற்றி சுழலும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் விண்வெளி வீரர்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும்  பார்க்க முடியும். இந்த மூன்று விண்வெளி வீரர்களும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் இடைவெளி விட்டு இந்தியாவை பார்க்க முடியும். அவர்கள் நுண்ணுணர்வு மீது சோதனைகள் நடத்த வேண்டும்.

மேலும் செய்திகள்