தேசிய செய்திகள்
மாலத்தீவில் கட்டுமான பணிகள் நடைபெறும் விமான ஓடுதளத்தில் ஏர்இந்தியா விமானம் தரையிறங்கியது

மாலத்தீவில் கட்டுமான பணிகள் நடைபெறும் விமான ஓடுதளத்தில் ஏர்இந்தியா விமானம் தவறாக தரையிறங்கியுள்ளது. #AirIndia

திருவனந்தபுரம்,

கேரளாவில் இருந்து 136 பேருக்கும் அதிகமானோருடன் சென்ற ஏர்இந்தியா விமானம் மாலே விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் விமான ஓடுதளத்தில் தவறாக தரையிறங்கியுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மாலே சென்ற ஏ320 விமானம் கட்டுமான பணிகள் நடைபெறும் ஓடுதளத்தில் தரையிறங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,  ஆனால இரண்டு டையர்கள் வெடித்துள்ளது என கூறப்படுகிறது. விமானம் தவறான ஓடுபாதையில் தரையிறங்கியது தொடர்பாக விசாரிப்பதாக ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.