தேசிய செய்திகள்
பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது

பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தை பாஜக தலைவர் அமித் ஷா துவக்கி வைத்தார். #BJPMeeting
புதுடெல்லி,

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, பா.ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அம்பேதகர் சர்வதேச மையத்தில் 2 நாள்கள் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தை பாஜக தலைவர் அமித் ஷா துவக்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பெட்ரோல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே பாஜக செய்திதொடர்பாளர் ஷநவாஸ் ஹூசைன் கூறும்போது, பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். எந்தெந்த விஷயங்கள் என கூற இயலாது என்று தெரிவித்தார்.