இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாளத்துக்கு சீனா புதிய சலுகை வழங்கியுள்ளது.

Update: 2018-09-08 10:21 GMT
காத்மாண்டு, 

இந்தியாவின் மிக அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம், இமைய மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், இதுவரை எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது. வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது. 

இந்த நிலையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அத்தியாவசியப்பொருட்களுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடரந்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நாட நேபாளம் துவங்கியது. அதுமுதல், இருநாடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்ட துவங்கின. தொடர்ந்து வர்த்தக ரீதியிலான உறவையும் விரிவுபடுத்த முடிவு செய்தன. 

இது குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே சரக்கு  மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி, சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின்  ஷெங்ஷென்,சியான், புங்காங், மற்றும் ஷான்ஷியாங் ஆகிய 4 துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள நேபாளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேபாளம் தன்னிடம் உள்ள லாக்‌ஷூ, லாசா மற்றும் ஸசிகாட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவுடன் நடமுறைக்கு வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 

மேலும் செய்திகள்