தொடர்ந்து 2-வது நாளாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் தொடர்ந்து 2-வது நாளாக ரெயில் போக்குவரத்து நிறுத்தம். #SouthKashmir #TrainSuspended

Update: 2018-09-09 03:55 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்னும் இடத்தில் நேற்று ராணுவ வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவன் போலீசாரை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஒரு போலீஸ்காரர் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான். அவன் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பிலால் அகமது என்பதும், லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த போலீஸ்காரர் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தெற்கு காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வடக்கு காஷ்மீரில் வழக்கம் போல் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், தெற்கு காஷ்மீரில் பாட்காம்- ஸ்ரீநகர்- அனந்த்நாக்-காசிகுந்த் பகுதிக்கு இயக்கக்கூடிய ரெயில்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரெயில் சொத்துகளை பாதுகாக்கும் விதமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்