தேசிய செய்திகள்
கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு

கேரளாவில் பள்ளி கூடம் ஒன்றின் கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,கேரளாவின் கண்ணூரில் பத்தனபுரம் பகுதியில் செயின்ட் ஸ்டீபன்ஸ் என்ற பள்ளி கூடம் உள்ளது.  இந்த நிலையில், அங்குள்ள கிணறு ஒன்றின் அருகே ரத்த கறை படிந்து இருந்துள்ளது.  இன்று காலை 9 மணியளவில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  உடனே சென்று கிணற்றுக்குள் பார்த்தபொழுது அங்கு உடல் ஒன்று மிதந்துள்ளது.இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டனர்.  இறந்து கிடந்தது சூசன் மேத்யூ என்ற ஆசிரியை என்பதும் கடந்த 12 வருடங்களாக அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.