7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - சுப்ரமணியன் சாமி

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார். #RajivCaseConvicts

Update: 2018-09-09 16:00 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியிருப்பதாவது:

7 பேர் விடுதலை விவகாரத்தில்  தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறியுள்ளார். 

இவ்வாறு அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்