தேசிய செய்திகள்
அரியானாவில் லேசான நில நடுக்கம்

அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது.ரிக்டர் அளவுகோலில் இது 3.8 ஆக பதிவானது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.