பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-09-10 02:34 GMT
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சிபிஐ (எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்