பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது - பா.ஜனதா சொல்கிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது. #BharathBandh #BJP

Update: 2018-09-10 08:46 GMT
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. பீகார், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பந்த் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.

முழு அடைப்பு போராட்டம் வெற்றியடையவில்லை, போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நேரிட்ட வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக பா.ஜனதா கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கஷ்டமான நிலை இருந்தபோதிலும் மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதில் பா.ஜனதா வலுவான நம்பிக்கையை கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் விரக்தியால் போராட்டம் நடக்கிறது. முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.



பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் இல்லையென்று மக்களுக்கு தெரியும், வெளிக்காரணி காரணமாகவே விலை உயர்வு உள்ளது. முழுஅடைப்பு போராட்டத்தில் மக்கள் ஏன் வேற்றுமையை கொண்டிருக்கிறார்கள்? விலை உயர்வு தற்காலிகமாக இருந்தாலும், அவைகளுக்கான காரணிகள் இந்திய அரசிற்கு அப்பாற்பட்டது என்று அவர்களுக்கு தெரியும். எல்லோருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது, ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம் ஜகானாபாத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று போராட்டம் காரணமாக மருத்துவமனை நோக்கி செல்ல முடியாததால் குழந்தை உயிரிழந்து உள்ளது. அதற்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கிடையே பீகாரில் குழந்தை உயிரிழந்தது ஆம்புலன்ஸ் போராட்ட கும்பலால் சாலையில் சிக்கியதால் கிடையாது. குழந்தையின் உயிரிழப்புக்கும், முழு அடைப்பு போராட்டத்திற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது. அவர்களுடைய உறவினர்கள் வீட்டிலிருந்தே மிகவும் காலதாமதமாக வெளியேறியுள்ளனர் என மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்