ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; அதனை காப்பாற்ற வேண்டும் - காங்கிரஸ்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிப்பெற்றது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-10 11:44 GMT


வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் முடிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலட் செய்தியாளர்களிடம் பேசினார். 

அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. காங்கிரஸ் ஒருபோதும் பாரத் பந்த் நடத்தியது கிடையாது, அதில் எங்களுக்கு நம்பிக்கையும் கிடையாது, இதுபோன்ற நிலைக்கு பா.ஜனதா அரசு தள்ளியுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் விரும்பியே கலந்துக்கொண்டார்கள், அரசுக்கு பாடத்தை கற்பித்துள்ளார்கள். இப்போதாவது அரசு விலையை குறைக்க வேண்டும், அதனுடைய நிலையை மாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் இதுகுறித்து எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். நாம் அனைவரும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும், அது இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்